தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு விடிவுதரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - tamilnadu will be first in India

இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து, ஒன்றிய அரசுடன் ஆலோசித்து தீர்வு காண வழிவகை செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு விடிவு தரும் - முதலமச்சர் மு க ஸ்டாலின்
இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு விடிவு தரும் - முதலமச்சர் மு க ஸ்டாலின்

By

Published : Mar 24, 2022, 3:39 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சமீப நாட்களாக இலங்கைத் தமிழர்கள் படக்கூடிய இன்னல்கள், அதன்காரணமாக பலர் தமிழ்நாடு வருவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுபோன்ற சூழலில் ஒன்றிய அரசுடன் தொடர்புகொண்டு, இந்த விவகாரத்தை எப்படி கையாளவேண்டும் என்று ஆலோசித்து வருவதாகவும்; இதற்கு நிச்சயம் விடிவு காலத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து தான் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துபாயில் உள்ள அபுதாபியில் நடைபெறக்கூடிய சர்வதேச தொழில் கண்காட்சியில் இன்று மாலை செல்லவுள்ள நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள், இருந்தாலும் இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சர் என்ற இடத்தை பெறுவதைவிட இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரை அடைவதில் தனக்கு மகிழ்ச்சி. அந்த இடத்தை எட்டுவதற்காக, தான் மேற்கொள்ள இருக்கும் அபுதாபி பயணம் துணை நிற்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க:பினராய் விஜயன், நரேந்திர மோடி சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details