இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின்,
- வாக்குறுதி 43இல், விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது.
- வாக்குறுதி 367இல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
- வாக்குறுதி 500இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன். அதன்படி, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
- இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.