மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடத்தினால் போதும் என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரயில்வே தேர்வுகள் குறித்த அறிவிப்பு மொழி சமத்துவத்திற்கு எதிரானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்! - M.K.Stalin tweet
ரயில்வே துறைசார்ந்த போட்டித் தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடத்தினால் போதும் என்ற இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு மொழி சமத்துவத்திற்கு எதிரானது என்று மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரயில்வே தேர்வுகள் குறித்த அறிவிப்பு மொழி சமத்துவத்திற்கு எதிரானது- மு.க.ஸ்டாலின்
இந்தப் பதிவில், இந்திய ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பு மொழி சமத்துவத்திற்கு எதிரானது என்றும் இதனால் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
மேலும் அதில், திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய பாரபட்சமற்ற நடைமுறைகளை எதிர்ப்பதாகவும்; மொழியியல் அல்லது புவியியல் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களும் சமமாக நடத்தப்படுவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.