இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைப் பிரிவில் பணியாற்றிய அஞ்சலை பொன்னுசாமி இன்று (ஜூன் 2) இயற்கை எய்தினார்.
இந்நிலையில், அஞ்சலை பொன்னுசாமியின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army - INA) இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.