தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐபேக் அலுவலகத்தில் பிரஷாந்த் கிஷோருடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை - ஸ்டாலின் வாக்குப் பதிவு

சென்னையில் உள்ள ஐபேக் அலுவலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Apr 6, 2021, 3:50 PM IST

Updated : Apr 8, 2021, 9:02 PM IST

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவுக்குப் பின் பேட்டியளித்த ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாகவும், ஆளும் அதிமுகவுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஐபேக் அலுவலகத்தில் பிரஷாந்த் கிஷோருடன் ஸ்டாலின்

இந்நிலையில், வாக்கு செலுத்திய பின்னர் சென்னையில் உள்ள ஐபேக் அலுவலகத்தில் அதன் தலைவர் பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஸ்டாலினுடன் அவரது மருமகன் சபரீசனும் உடனிருந்தார். அண்மையில், சபரீசனின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுகவுக்கு தோல்வி பயம்: வாக்களித்த பின் மு.க. ஸ்டாலின்

Last Updated : Apr 8, 2021, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details