தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையின் மிக நீளமான பாலம்-திறந்து வைத்தார் முதல்வர்

நெடுஞ்சாலைத் துறை சார்பில் 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தாம்பரம் - வேளச்சேரி பாலம் திறந்து வைப்பு
தாம்பரம் - வேளச்சேரி பாலம் திறந்து வைப்பு

By

Published : May 13, 2022, 1:58 PM IST

Updated : May 13, 2022, 2:08 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.13) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை திறந்து வைத்தார்.

ஏற்கனவே வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 146.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - இரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேளச்சேரி - தாம்பரம் தடத்தில், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது, தாம்பரம் - வேளச்சேரி தடத்தில், மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. நீளத்தில் இம்மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும்.

மேலும், தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

இதையும் படிங்க:அனைத்து திட்டங்களிலும் தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது - அண்ணாமலை

Last Updated : May 13, 2022, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details