தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்' - ஸ்டாலின் ட்வீட் - மணியாச்சி விபத்து குறித்து ஸ்டாலின் ட்வீட்

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

'சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்'  - ஸ்டாலின் ட்வீட்
'சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்' - ஸ்டாலின் ட்வீட்

By

Published : Feb 16, 2021, 1:18 PM IST

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் கூலி வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் (குட்டி யானை) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற பணியாள்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இந்நிலையில் ஐந்து பேரின் உயிரிழப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "விவசாயப் பணிக்காக சென்ற ஐந்து பெண் தொழிலாளர்கள் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

சாலை பாதுகாப்பு மாதத்திலும் ஏழை தொழிலாளர்களின் அவல நிலை தொடர்கிறது" என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மணியாச்சியில் விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 15 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details