திரைத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர், தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத் ஆகியோருக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் நான்காவது ஆளாக இந்த உயரிய விருதைப் பெறுபவர் ரஜினிகாந்த்.
'தன்னிகரற்ற கலைஞன் சூப்பர் ஸ்டார்' - ரஜினிக்கு ஸ்டாலின் வாழ்த்து - Stalin congratulates Rajini
நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள் என திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்
இவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் "இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இந்த விருது தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.