சென்னை:அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அமமுக பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக வெற்றிவேல் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்! - அமமுக வெற்றிவேல்
அமமுக பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில், இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நான் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை, தேவைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து, அவற்றிற்குத் தீர்வு கண்டவர். சட்டப்பேரவை உறுப்பினராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர், பெரம்பூர் தொகுதி மக்களின் பிரச்னைகளைச் பேரவையில் ஆக்கபூர்வமாக எடுத்து வைத்துப் பேசக்கூடியவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.