மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான வருவாய்த் துறை அனுமதிபெற்ற பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையி்ல், பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய் உள்ளிட்ட ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து: இறந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்
சென்னை: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், இரண்டு பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட மூவர் 80 விழுக்காடு தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதனை அடுத்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.
தீபாவளிப் பண்டிகை நேரத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதிசெய்யுமாறு அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவியை அளித்திட வேண்டும் என்றும், காயம்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.