கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் இன்று, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அதள பாதளத்திற்குள் சென்று விட்டது. விஷம்போல் விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு என நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வது தான் பழனிசாமி ஆட்சி. எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் கிடையாது. மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத நிலைக்கு உள்ளது இந்த அரசு.
வரும் 29 ஆம் தேதி முதல் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ - ungal thokuthiyil stalin
10:29 January 25
சென்னை: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்துதான், வரும் தேர்தலில் இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பல்வேறு மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி அவர்களின் பிரச்சனைகளை, கோரிக்கைகளை நேரில் கேட்டு வந்தேன். அதன் அடுத்தப்பகுதியாக, வரும் 29 ஆம் தேதி முதல் 100 நாட்கள், 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பெயரில் சந்திக்க உள்ளேன்.
அதன்படி, எனது முதல் கூட்டம் திருவண்ணாமலையில் தொடங்குகிறது. அப்போது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை நானே பெற்று, அதற்கு சீல் வைப்பேன். திமுக ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் அம்மனுக்களை பரிசீலித்து விசாரிக்க ஒரு தனித்துறை உருவாக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்ய தவறியதை திமுக செய்யும். அதன்படி, 1 கோடி குடும்பங்களின் குறைகளாவது தீர்க்கப்படும். இது உறுதி. புதிய கோணத்தில் இப்பிரச்சாரம் அமையும்” என்றார்.
இதையும் படிங்க:எடப்பாடி காளியம்மன் கோயில் குடமுழுக்கு! - முதலமைச்சர் பங்கேற்பு!