தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மும்மொழிக் கொள்கை! குழு அமைத்தது திமுக - முக ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் பொன்முடி உட்பட எட்டு பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைத்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

mk stalin

By

Published : Jul 14, 2019, 3:02 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ் மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித் துறை வல்லுநர்களின் கருத்தினை அறிய திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. எனவே, இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக சார்பில் பின்வரும் “ஆய்வுக் குழு” அமைக்கப்படுகிறது.

1. க. பொன்முடி, முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர்.

2. தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

3. அ. ராமசாமி, முன்னாள் துணைத் தலைவர், தமிழக அரசு உயர்கல்வி மன்றம்.

4. ம.இராஜேந்திரன், முன்னாள் துணை வேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.

5. கிருஷ்ணசாமி, முன்னாள் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி.

6. சி.வி.எம்.பி. எழிலரசன், எம்எல்ஏ, கழக மாணவர் அணிச் செயலாளர்.

7. டாக்டர் ரவீந்திரநாத், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம்.

8. பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுக் கல்விக்கான மாநில மேடை.

9. டாக்டர் எஸ். செந்தில்குமார், எம்.பி.,

வரைவு புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆராயும் இந்த “ஆய்வுக் குழு” பத்து நாட்களுக்குள், தனது அறிக்கையினை தலைமையிடம் அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details