தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார். அவது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 39 தொகுதிகளில் வென்ற ஸ்டாலின் தான் சரியான தலைமை என திமுகவினரும், பல சிக்கல்களுக்கு இடையே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் சரியான தலைமை என அதிமுகவினரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி - mk azhagiri
சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
அழகிரி
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கருத்து குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மைதான். தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கான வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்றார்.
ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரஜினியின் கட்சியில் இணைவது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்று அவர் பதிலளித்தார்.
Last Updated : Nov 14, 2019, 1:07 PM IST