தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பதிலுரையை எதிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி புறக்கணித்தார்.
'தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை நீக்கவில்லை' - தமிமுன் அன்சாரி - தமிழ்நாடு சட்டப்பேரவை
சென்னை: தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஆறு கேள்விகளை நீக்கிவிட்டு அமல்படுத்தக் கோரியும் அதனைச் செய்யாததால் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேசிய மக்கள்தொகை பதிவேட்டில், இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் கூறினார். இந்த அரசு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், டெல்லியில் இருப்பவர்கள் அப்படி இல்லை. எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஆறு கேள்விகளை நீக்கிவிட்டு அமல்படுத்துங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை. எனவே நிதியமைச்சரின் பதிலுரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்“ என்றார்.
இதையும் படிங்க: பேச அனுமதி மறுப்பு - பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு!