அப்போலோ மருத்துவமனையில் ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரேநாளில் அடுத்தடுத்து நான்கு பேருக்கு மிட்ராக்ளிப் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.
மிட்ராக்ளிப் சிகிச்சை
இதய அறுவை சிகிச்சைக்காக இதயத்தைத் திறக்காமல், மிட்ரல் வால்வில் உண்டாகும் கசிவை சரிசெய்ய உதவும் மிட்ராக்ளிப் சிகிச்சை, மிக மெல்லிய துளையிட்டு இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
இந்த மருத்துவ நடைமுறை அறுவை சிகிச்சையினால் ஏற்படும் அபாயமுள்ள நோயாளிகளுக்கு வாழ்க்கையைக் காப்பாற்ற உதவியாக இருக்கிறது. மிட்ராக்ளிப் உள்வைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நான்கு நோயாளிகளில் ஒருவர் மிக அதிக வயதுடையவர் (87).
மிட்ராக்ளிப் மருத்துவ சிகிச்சை செய்துகொண்ட அதிக வயதுடையவர்
இது குறித்து அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது,
"அறுவை சிகிச்சை மேற்கொள்வதினால், அபாயமுள்ள கடுமையான மிட்ரல் கசிவுள்ள நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மூலம், சிகிச்சையளிக்க முடிகிறது. இந்த மருத்துவ நடைமுறை அவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கையை அளிக்க உதவுகிறது.
தற்போதுவரை, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,00,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது" என்றார்.
அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் மருத்துவர் சாய் சதீஷ் கூறும்போது,
"மிகவும் பலவீனமான, வயதானவர்களுக்கு, வழக்கமான மிட்ரல் வால்வு அறுவை சிகிச்சை செய்ய மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. மிட்ராக்ளிப் என்பது, செயல்பாட்டு பாதிப்பு, உருக்குலையும் மிட்ரல் கசிவு ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில், சருமம் மூலம் ஊடுருவும் குழாயைச் செலுத்தி (தோல் வழியாக இம்முறை செய்யப்படுகிறது) மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பமாகும்.
இந்தச் செயல்முறை, கேத் லேப்பில் வைத்து சருமத்தை ஊடுருவி செய்யப்படுகிறது. இதில் பொருத்தப்படும் சாதனம் நீக்கக்கூடியதோடு மட்டுமில்லாமல், இடமாற்றம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. அறுவை சிகிச்சையின் மூலமான அபாயமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிக்கு, மிட்ராக்ளிப் நீண்ட காலம் பயனளிக்கும் சிக்கனமாக ஒன்றாக இருப்பதால், அவர்கள் மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.
இதில் மிக முக்கியமானது, நோயாளி தனது வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுப்பதன் மூலமாகவும், சுறுசுறுப்பான இயல்பான வாழ்க்கை முறையை மீண்டும் தொடர்வதன் மூலமாகவும், அவர் தனது புதிய வாழ்க்கையைப் பெற முடியும்" என்றார்.