தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரோம்பேட்டை எம்ஐடி-யில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - எம்ஐடி கல்வி நிறுவனம்

குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட 80 பேரில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

mit students tested covid positive
Madras Institute of Technology

By

Published : Jan 6, 2022, 1:41 PM IST

சென்னை: குரோம்பேட்டையில் எம்ஐடி கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. அங்குள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை 1,747 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மருத்துவ குழுவினால் கண்காணித்து வருகின்றனர். மேலும் 330 மாணவர்களின் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

Madras Institute of Technology

இந்நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்ட 80 மாணவர்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 50 மாணவர்களுக்கு S ஜீன் வரிசை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பா என கண்டறிய, மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details