தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கால்பந்து விளையாடச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் மாயம் - football

சென்னை ஆதம்பாக்கம் அருகே கால்பந்து விளையாடச் சென்ற எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மாயம், கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்பந்து விளையாடச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் மாயம்
கால்பந்து விளையாடச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் மாயம்

By

Published : Jun 1, 2022, 9:43 PM IST

சென்னை: ஆதம்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அவருடைய 14 வயது மகன் யோகேஸ்வரன், நங்கநல்லூர் காலேஜ் ரோடு, பிரின்ஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பி.வி. நகர் நேரு நெடுஞ்சாலை கன்டோன்மென்ட் கிரவுண்டில் கால்பந்து விளையாட யோகேஸ்வரன் சென்றுள்ளார்.

இதையடுத்து காலை 7.30மணி அளவில் யோகேஸ்வரன் கால்பந்து விளையாடிவிட்டு வீட்டிற்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாக யோகேஸ்வரன் வீட்டுக்கு வராததால் அவரின் பெற்றோர்கள் மைதானத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு யோகேஸ்வரனின் சைக்கிள் மட்டுமே இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரின் நண்பர்களின் வீடு மற்றும் பல இடங்களில் 4 மணி நேரமாக தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கால்பந்து மைதானத்திற்கு அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி யோகேஸ்வரன் நண்பர்களுடன் எங்கேயாவது சென்றாரா அல்லது அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது கடத்திச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்த பெண்; கொடூர கொலை செய்த தந்தை

ABOUT THE AUTHOR

...view details