இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கௌதம் குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 18.9.2020 அன்று காலமானார்.
சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கௌதம் குமார் மறைவு - முதலமைச்சர் இரங்கல்! - chief minister edappadi palaniswami
சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கௌதம் குமார் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
![சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கௌதம் குமார் மறைவு - முதலமைச்சர் இரங்கல்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8876499-1036-8876499-1600658741407.jpg)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அந்தச் செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். கௌதம் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் மறைவு - ஓ.பி.எஸ். இரங்கல் !