தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர் விவரங்களை அளிக்க ஆணை - அரசுப்பள்ளி

சென்னை: தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர் விவரங்களை 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

school
school

By

Published : Sep 23, 2020, 12:05 PM IST

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”தனியார் பள்ளிகளிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர் என்கிற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல், சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற விவரங்களையும் இந்த மாதம் 25ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் பள்ளிக் கல்வித் துறை செயலர் தலைமையிலான கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரம் முழுமையாக தெரியவரும்.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை - உயர் கல்வித்துறை சார்பில் நாளை கருத்துக்கேட்பு கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details