தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருபவர் நாசர். இவருக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் மதன். அமைச்சரை தலைமைச் செயலகத்தில் இறக்கிவிட்டு மதன் வெளியே சென்றார். பின் மீண்டும் தலைமை செயலகத்திற்கு மதன் வந்தபோது, தலைமை செயலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த முதல்நிலை காவலரான செல்வம் மதனை சோதனை செய்தார்.
காவல்துறையினரை ஒருமையில் பேசிய அமைச்சரின் கார் ஓட்டுநர்! - தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர்
சென்னை: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சரின் கார் ஓட்டுநரை தலைமைச் செயலகத்தில் வைத்து பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்ததால் ஓட்டுநருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
car
அப்போது மதன் காவலரை பார்த்து என்னை ஏன் சோதனை செய்கிறாய் என ஒருமையில் கேட்டுள்ளார். இதனால் காவலருக்கும் மதனுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இரு தரப்பிலும் புகார் எதுவும் தரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.