கரோனோ தொற்று காரணமாக, நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தன்னலம் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர், காவல்துறையினர், ஊடகத்துறையினர்களை பாராட்டும் விதமாக நேற்று மாலை 5 மணி அளவில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தெருக்களிலும் ஒன்றுகூடி கைகளைத் தட்டி தங்கள் ஆதரவையும் பாராட்டையும் அவர்களுக்கு தெரிவித்தனர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருடன் கைத்தட்டி நன்றி பாராட்டினார். அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது குடும்பத்தினருடன் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கைதட்டி நன்றி பாராட்டினா ர்.
முன்னதாக மருத்துவர்கள், செவிலியரை பாராட்டி அமைச்சர் விஜயபாஸ்கர் கவிதை ஒன்றை எழுதி தனது வாழ்த்துகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கில் அமைதியாக அரங்கேறிய திருமண நிகழ்வுகள்