தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூக இடைவெளியை பின்பற்றத் தவறினால் கடைகளுக்கு சீல் - அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை! - சமூக இடைவெளி

சென்னை: சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படுமென்றும், அலுவலர்கள் அதனை கவனிக்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.

minister
minister

By

Published : Apr 15, 2020, 7:15 PM IST

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இறைச்சிக் கடைகள், மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை மாநகரப் பகுதிகளில் பறக்கும் படையினர் முறையாக நாள் ஒன்றுக்கு இருமுறை, சமூக இடைவெளி கடைகளில் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க வேண்டும். இதனை பின்பற்றாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: பரிசோதனை மையங்களை அதிகரிக்க டிடிவி தினகரன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details