தலைமைச் செயலகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அரசின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பாண்டி பஜார் தியாகராய சாலையில் 40.79 கோடி ரூபாய் மதிப்பில், சுமார் 500 இருசக்கர மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், முற்றிலும் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு வரும், 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படவுள்ளது “ என்று தெரிவித்தார்.