ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று(செப்.20) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார்.
கோவிட் நிவாரணப் பணிகள்: முதலமைச்சரிடம் ரூ.93 லட்சம் வழங்கிய அமைச்சர்! - கோவிட் நிவாரணப் பணிகள்
சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கோவிட் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.93 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அதையடுத்து அவர் கோவிட் நிவாரணப் பணிகளுக்காக திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு நீர்வள முதலீட்டுக் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 93 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்தக் காசோலை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையதளத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர்