தமிழக அரசின் சார்பில் அறநிலையத் துறையின் கோயில்களில் பொது விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுடன் உணவு உட்கொண்டார். பின்னர், அங்கிருந்த 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சர் வேலுமணி இலவச சேலைகள் மற்றும் வேட்டிகளை வழங்கினார்.
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வேட்டி சேலை வழங்கிய அமைச்சர் வேலுமணி - அண்ணா நினைவு நாள்
சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கபாலீஸ்வரர் கோயில் பொது விருந்தில் பங்கேற்று பக்தர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
velumani
இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்தகொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணாவின் 51ஆவது நினைவுதினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை