தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு’

சென்னை: புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும் எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

udhayakumar
udhayakumar

By

Published : Nov 26, 2020, 3:03 PM IST

Updated : Nov 26, 2020, 3:36 PM IST

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில், நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், “ நிவர் புயல் காரணமாக 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை எந்த ஒரு மீனவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 101 வீடுகள் சேதமடைந்துள்ளன. 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மாநிலம் முழுவதும் 3,085 சிறப்பு முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட வாரியாக பணிகள் தொடங்கியுள்ளன. கணக்கெடுப்பு முடிந்த பின்பு இழப்பீடு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார்.

’புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு’

உள்ளாட்சித்துறை சார்பாக பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் உள்ள இயந்திரங்களை, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது. சென்னையில் மழை நீர் செல்ல முடியாமல் இருக்கும் இடங்களில், அதனை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் “ என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் மரங்கள் விழுந்து 7 கார்கள், 2 ஆட்டோக்கள் சேதம் - காவல் துறை

Last Updated : Nov 26, 2020, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details