நிவர் புயல் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ” நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பிருப்பதால், 4 ஆயிரம் நிவாரண முகாம்களில் 13 லட்சம் பேரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 22 படகுகள் கரை சேர்ந்துள்ளன.
தமிழகம் வருகிறது ராணுவம்! - நிவர் புயல்
சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு 8 ராணுவக் குழுக்கள் இன்று வரவிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தின் 8 குழுக்கள் சென்னை வரவுள்ளது. இதில் 6 குழுக்கள் திருச்சிக்கு செல்ல இருக்கிறது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்து பின் குறையும். அதனால் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு அதிகளவில் நீர் வரும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால், ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசித்தோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர் “ என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல் - சென்னை மழை நிலவரம்