தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு - அரசு செயல்பாடுகள்

"திமுக ஆட்சியின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவின் 130 நாட்கள் ஆட்சியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

minister thangam thennarasu slams opposition party
minister thangam thennarasu slams opposition party

By

Published : Sep 24, 2021, 5:32 PM IST

சென்னை:திமுகவினர் மீது வழக்கு போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அதிமுக அரசு ஆட்சியிலிருந்தபோது வழக்கு போட முடியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்ற சில மணி நேரங்களில் மக்களின் நன்மதிப்பை பெறும் 5 கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்து போட்டார்.

மொத்தம் திமுக அளித்த 503 தேர்தல் வாக்குறுதிகளில், 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இது போன்ற விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கது.

துறைவாரியாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை முதலமைச்சர் அவரது அறையில் நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளும் அரசு மீது முன்வைத்துள்ளார். திமுகவினர் மீது வழக்கு போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு போடவில்லை.

சந்தையில் உள்ள எல்லா சிமென்ட்களுடன் போட்டி போட கூடிய வகையில் வலிமை சிமெண்ட் இருக்கும். ஃபோர்டு கார் நிறுவன விவகாரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உரிய நேரத்தில் உரிய முடிவை முதலமைச்சர் எடுப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:முடி வெட்ட சென்ற பெண்ணிற்கு ரூ.2 கோடி வழங்கிய நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details