திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராமில் டைடல் பார்க் கட்டடப்பணிகள், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டைடல் பார்க்கை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் டிட்கோ அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்துகொண்டு டைடல் பார்க் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 'கடந்த 2 ஆண்டுகளாக கட்டடப் பணிகள் தேக்கம் அடைந்திருந்தது.
தற்போது இதன் பணியை வேகமாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் சதுர அடியில் கட்டப்படும் இந்த தொழில்நுட்பப் பூங்கா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி ரூ.279 கோடியில், 21 மாடி கட்டடமும் சென்னையில் உள்ள தொழில்நுட்பப் பூங்க எப்படி இயங்குகிறதோ அதே விதிமுறைகள் படி, பட்டாபிராம் தொழில் நுட்பப்பூங்காவும் இயங்கும். இந்த தொழில் நுட்பப் பூங்காவில் சுமார் 2,000 பேர் பணிபுரிய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக வேண்டும் என்பதே எனது லட்சியம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்