தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 ஆண்டுகளில் ரூ.7,500 கோடி கடனை அடைக்க அரசு உதவும் - தங்கம் தென்னரசு

தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சிறப்பாகப் பணியாற்றி வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

By

Published : Jul 9, 2021, 10:44 AM IST

சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ் நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளை அறிந்து அதனை சீராகப் பூர்த்தி செய்துவரும் ஒரு முன்னோடி மாநில நிதி நிறுவனம் ஆகும்.

இக்கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களின் கடன் தேவையினைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு, அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கிடும் நிதிதொழில்நுட்ப (FINTECH) நிறுவனங்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் லெண்டிங் கார்ட் பைனான்ஸ் லிமிடெட் (Lendingkart Finance Limited) என்னும் நிதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு ரூ.10 கோடிக்கானக் காலக் கடனை இக்கழகம் அனுமதித்துள்ளது. அந்நிறுவனத்திற்கான் கடன் தொகையான ரூ.10 கோடிக்கானக் கடன் அனுமதி ஆணையை நேற்று (ஜூலை 8) தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

தங்கம் தென்னரசு பேச்சு

இதையடுத்து, தங்கம் தென்னரசு தொடர்ந்து பேசும்போது, "தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.

காலத்திற்கேற்றவாறு மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியினை உள்வாங்கி, வரும் ஐந்தாண்டுகளில் ரூ.7,500 கோடி கடன் நிலுவைத்தொகை அடைந்திடவும், மிகப்பெரிய வளர்ச்சியினை நோக்கி செயல்படுகின்ற வேளையில் அதற்குத் தேவையான உதவிகளைத் தமிழ்நாடு அரசு செய்துதரும்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா, தொழில்துறை முதன்மைச் செயலாளர் ந.முருகானந்தம், தொழில்துறை ஆணையர் சிகி தாமஸ் வைத்தியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'அஞ்சலி பாப்பா’வாக மாறிய அனிதா ராதாகிருஷ்ணனால் சிரிப்பலை

ABOUT THE AUTHOR

...view details