தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிரையப்பத்திரம் வழங்க மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் - தா.மோ. அன்பரசன் - Tamil Nadu Slum Clearance Board

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீட்டுமனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தா.மோ. அன்பரசன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் தா.மோ. அன்பரசன், minister tha mo anbarasan,  TNSCB Review meeting
minister tha mo anbarasan

By

Published : Nov 27, 2021, 8:09 AM IST

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் வாரியப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று (நவம்பர் 26) நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பணிகள், உள்கட்டமைப்புப் பணிகள், உலக மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகளின் நிதி உதவித் திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விற்பனைப் பத்திரம், மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கு விற்பனைப் பத்திரம், புதிதாகத் தொடங்கப்பட உள்ள திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

கருணைத்தொகை உயர்த்தி அரசாணை

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய தா.மோ. அன்பரசன், "சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வதற்கு முன்னர், அக்குடியிருப்புகளில் வாழும் குடும்பங்கள் மாற்றிடங்களுக்கு குடிபெயரும்பொழுது, மறுகட்டுமான திட்ட காலங்களில் வெளியே வாடகை வீட்டில் வசிக்க கருணைத் தொகையாக ரூ.8000 வழங்கப்பட்டுவந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இத்தொகையினை ரூ 24,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, அதற்கு நவம்பர் 22 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மாதம் ஒருமுறை சிறப்பு முகாம்

நடப்பாண்டில் குடியிருப்புவாசிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் கிரையப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய ஏதுவாகவும், ஏழை எளிய மக்கள் கிரையப்பத்திரங்களை எளிதில்பெறும் வகையிலும் வாரிய திட்டப்பகுதிகளிலேயே மாதம் ஒரு முறை சிறப்பு முகாம்கள் நடத்தி, கிரையப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் பயனாளிகளையே தேர்ந்தெடுக்காமல் கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களைக் கொண்டு தகுதியான பயனாளிகளை உடனடியாகத் தேர்வுசெய்து ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்க உரிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவித்துள்ளவாறு, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை மழைக்காலம் முடிந்தவுடன் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

தரம் குறித்த ஆய்வுகள்

தற்போது, நடைபெற்றுவரும் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தின்கீழ் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுமான திட்டங்களுக்கான பணிகளை விரைவாக தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும்.

வாரியத்தால் கட்டப்படும் புதிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களாக அரசு பொறியியல் பல்கலைகழங்கங்கள், அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தற்போது, இந்நிறுவனங்களைக் கொண்டு 18 திட்டப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வரும் காலங்களில் அனைத்துப் புதிய திட்டப் பகுதிகளிலும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்படும். மழைக் காலங்களில் வாரிய திட்டப் பகுதிகளில் மழைநீர் தேங்காமலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். சுகாதாரத் துறையினருடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இக்குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சமுதாய வளர்ச்சிப் பிரிவின் மூலம் தொழில்திறன் பயிற்சிகள், தொழில் தொடங்க நிதிஉதவிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கடைசி 5 மாதங்களில் ரூ. 56,000 கோடிக்கு முதலீடு, 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details