தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தரவேண்டும்' - அமைச்சர் தாமோ அன்பரசன் - sports news

தேசிய அளவில் நடைபெற்ற பார்வையற்றோர்களுக்கான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

அமைச்சர் தாமோ அன்பரசன்
அமைச்சர் தாமோ அன்பரசன்

By

Published : Oct 29, 2021, 2:25 PM IST

Updated : Oct 29, 2021, 7:05 PM IST

சென்னை:பார்வையற்ற ஆண்கள், பெண்களுக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டி சென்னை செண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது.

நான்கு நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடக, மேற்கு வங்காளம் என 16 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக என 12 அணிகளும் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இதில் நேற்று (அக்.28) பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் நடந்தன. இதில் கர்நாடக அணி முதல் இடத்தையும், இந்தியன் பார்வையற்றோர் கால்பந்து அகாடமி இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும், பாண்டிச்சேரி நான்காம் இடத்தையும் பிடித்தது.

அமைச்சர் தாமோ அன்பரசன்

இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல உதவிகள், ஊக்கத் தொகைகளைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதை விளையாட்டு வீரர்கள் முறையாகப் பயன்படுத்திப் பல வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தரவேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Oct 29, 2021, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details