தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடுப்பூசி சிறப்பு முகாம் - 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு - 108 அவசர ஊரதி

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.25) நடைபெறும் 20 ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன்

By

Published : Sep 25, 2021, 2:27 PM IST

சென்னை: தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், 108 அவசரகால ஊர்தி மேலாண்மை சேவை ஆண்டு விழா நடைபெற்றது.

முன்னதாக 108 அவசர கால ஊர்தி சேவையின் கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர், அவசர கால ஊர்தி பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். முதல்மைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த மே 7ஆம் தேதிக்குப் பிறகு 106 கோடி பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் 108 அவசர கால ஊர்தி சேவை மூலம் இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். 542 வாகனம் சிறப்பு வாகன பணியில் உள்ளது. நாளை (செப்.26) மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை தாண்டியும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

கையிருப்பிலுள்ள தடுப்பூசி அனைத்தும் மாவட்டம் வாரியாக அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ள 22 லட்சம் பேர் நாளை (செப்.26) நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், 60 வயதை தாண்டியவர்கள், கரோனா 2ஆம் அலையில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

திங்கட்கிழமை தடுப்பூசி முகாம் செயல்படாது

56 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 17 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நாளை (செப்.26) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் திங்கட்கிழமை தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை தடுப்பூசி முகாம் செயல்படாது.

முதலமைச்சர் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளதன் மூலம் 50 லட்சம் தடுப்பூசி கேட்டதில் 29 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 24 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு மைய இயக்குநர் தாரேஷ் அகமது, திமுக சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:‘திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது’ - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details