கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நடத்துநர் மாரிமுத்து யோகநாதான், சுற்றுசூழலை பாதுகாக்கும் உயரிய நோக்கோடு 30 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், தான் நடத்துநராகப் பணிபுரியும் பேருந்தில் பயணிப்பவர்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.
3 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்ட நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு - conductor marimuthu yoganathan
சென்னை: 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடத்துநர் மாரிமுத்து யோகநாதானுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தச் சேவைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "சுற்றுச்சூழலை பாதுகாக்க 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நடத்துநர் மாரிமுத்து யோகநாதான் சேவையை மனதார பாராட்டி வாழ்த்துகின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில்தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன -அமைச்சர் எஸ்பி வேலுமணி!