சென்னை:கடந்த ஓராண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 24,036 மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் (மே 05) மானியக் கோரிக்கைகள் குறித்த விவாத நேரத்தில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.
அப்போது, “தேவையின் அடிப்படையில் கூடுதலாக மின் மாற்றிகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். சென்னையில் உள்ள 1,336 பில்லர் பாக்ஸ்களின் உயரம் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் தரையோடு தரையாக உள்ள எஞ்சிய பில்லர் பாக்ஸ்கள் மாற்றித் தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பல இடங்களில் வீடுகளுக்கு மேலாக செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன, எங்கெங்கெல்லாம் மாற்றப்பட வேண்டுமோ, அவற்றையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: உழவர்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்த குரல்: நாராயணசாமி நாயுடுவுக்கு அமைச்சர் அஞ்சலி