சென்னை:தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் நள்ளிரவில் ஒரு பதிவு வெளியானது. அதில், "அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை" எனப் பதிவிட்டப்பட்டிருந்தது.
அதன்பின் 2ஆவது ட்வீட்டில் கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம். எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.
உதவிக்கான கிரிப்டோ முகவரிகள்" என்று பதிவிடப்பட்டிருந்தது. அதோடு Variorius (@V_Senthilbalaji) என்று கணக்கின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் அந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அந்நிறுவனத்திடம் இன்று (செப்-4) காலை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது இதையும் படிங்க:"உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை ஒடுக்க முயற்சித்துவருகிறது"