சென்னை:கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய மறுசீரமைப்பு செய்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தலைமை கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ஆர்.ஜி.சக்தி சரவணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜுவிடம் தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.24) வழங்கினார்.
பொங்கல் பரிசு தங்குதடையின்றி வழங்குவது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு! - அமைச்சர் செல்லூர் ராஜூ
ரூ.2500 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் எவ்வித தங்கு தடையுமின்றி வழங்குவது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு, 2021ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு துவக்கி வைக்க, ரூ. 2,500 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் எவ்வித தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:இசைக் கலைஞர்களுக்கு மூன்று மடங்கு ஊதிய உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!