கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறைத் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறைத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த மாதம் இரண்டு கோடியே 30 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. 98.91 விழுக்காடு மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். அதேபோன்று வெங்காய விலையையும் தற்போது குறைத்துள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் பிரச்னையை உணர்ந்து தற்போது விவசாயக் கடன் 10 ஆயிரம் கோடி என அறிவித்துள்ளார். அதேபோன்று கடந்த மூன்று ஆண்டுகளில், திமுகவின் மொத்த ஆட்சியில் வழங்கியதைவிட அதிகமான கடனை விவசாயத்திற்கு வழங்கியுள்ளோம்” என்றார்.
உள்ளாட்சியில் திமுக வென்ற இடங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்குவோம் என்று அமைச்சர் கருப்பணன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், அதனை அமைச்சர் tounge slip ஆகி தவறாகக் கூறி இருப்பார் என்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்கு நிதியை மத்திய அரசு நேராக ஒதுக்கிவருவதால், அதில் மாநில அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் விளக்கினார்.
அமைச்சர் கருப்பணனுக்கு ’டங் சிலிப்’ தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்று விருதளித்தவர்களை அடிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார். பதவி வெறி உச்சத்தை அடைந்து ஸ்டாலின் இப்படி பேசிவருவதாகவும், பத்தாம்பசலித்தனமாக பேசுவதாக திமுகவினரே நினைக்கும் அளவிற்கு பேசிவருகிறார் என்றும் செல்லூர் ராஜு கூறினார்.
இதையும் படிங்க: திமுக வென்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!