சென்னை:இந்து சமய அறநிலைய துறை அமைச்சராக இருந்து வரும் பி.கே சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணனான தேவராஜுலு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜுலுவிற்கு கடந்த 10 வருடங்களாக பல்வேறு உடல் உபாதை பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நோயால் கடும் அவதிப்பட்டு தேவராஜுலு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு தேவராஜுலு அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது தேவராஜுலு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.