சென்னை:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சேகர்பாபு,
"திருச்செந்தூர் கோயிலைச் சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டடங்கள் கட்டுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவருகிறது. கோயிலைச் சுற்றியுள்ள பனை பொருள்கள், கடல்சார் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதைவிட அதிகளவில் அமைக்கப்படும்.