சட்டப்பேரவையில் இன்று, கோவை தெற்கு தொகுதியில் உள்ள பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையங்களை சீரமைத்து தர அத்தொகுதி உறுப்பினர் அர்ஜுனன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, “தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் சீரமைப்பதற்கான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
அங்கன்வாடி மையங்கள் விரைவில் சீரமைப்பு - அமைச்சர் சரோஜா தகவல்! - சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா
சென்னை: அனைத்து அங்கன்வாடி மையங்களும் விரைவில் சீரமைக்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
saroja
மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் பழுதடைந்த அங்கன்வாடி மையங்களை சீரமைக்க தலா 2 லட்சம் ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனி அலுவலர்கள் பதவிக்கால நீட்டிப்பு மசோதா தாக்கல்!