சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல் பேரவைக்கூட்டம் நேற்று முன்தினம் (ஜனவரி 5) ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்றுடன் (ஜனவரி 7) நிறைவடைகிறது.
பேரவையில் வினா விடை நேரத்தின்போது திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், "ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரருக்கும் மாதம் ஒன்றுக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கவும், அதன் விலையை குறைக்கவும் அரசு ஆவண செய்யுமா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதிலளித்து பேசிய உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "2006இல் மத்திய அரசின் ஒதுக்கீடு 59,852 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணை ஒதுக்கீடு, தற்போது 7500 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், சிலிண்டர் இணைப்பே இல்லாதவர்களுக்கு 3 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு லிட்டரும் கொடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரிடம் ஆலோசித்து மத்திய அரசிடம் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கூட்டுறவு திருத்த மசோதாவை கண்டித்து அதிமுக வெளிநடப்பு