தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கம் - அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளர்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக மாவட்ட செயலாளர் பதிவியிலிருந்து நீக்கம்

By

Published : Mar 22, 2020, 7:02 PM IST

Updated : Mar 22, 2020, 7:43 PM IST

18:57 March 22

பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.  இவர் அண்மைகாலமாகவே தொடர்ந்து சர்ச்சையாக பல கருத்துகளை தெரிவித்து வந்து பலரின் விமர்சனங்கங்களுக்கு ஆளானார்.  

குறிப்பாக, அவரது கருத்து பாஜக சாயத்தை கொண்டுள்ளது என சர்ச்சை எழுந்தது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தை பற்றிய அவரது கருத்து சிறுபான்மையினரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று அவர் கரோனா வைரஸ் தொடர்பாக இந்து மதம் சார்ந்து ட்வீட் பதிவிட்டு பின்பு அதை நீக்கினார்.  

அதனை தொடர்ந்து தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Mar 22, 2020, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details