சென்னை:தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரைப்படி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் - அமைச்சர் ராஜகண்ணப்பணின் இலாகா மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரைப்படி இந்த இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
![அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் அமைச்சர் ராஜகண்ணப்பணின் இலாகா மாற்றம்- தொடர் சர்ச்சை காரணமா?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14871717-thumbnail-3x2-rajakannapan.jpg)
அமைச்சர் ராஜகண்ணப்பணின் இலாகா மாற்றம்- தொடர் சர்ச்சை காரணமா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்தபிறகு, முதல் முறையாக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சமூகம் சார்ந்த கருத்துகள் குறித்து தெரிவித்து தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி- தமிழ்நாடு அரசு அரசாணை