தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பொங்கல் பண்டிகைக்கு 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்' - அமைச்சர் ராஜ கண்ணப்பன் - திருநெல்வேலி செய்திகள்

Special buses for Pongal: பண்டிகைக் காலங்களில், தனியார் பேருந்துகளில் அதிகமான பயணக் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலம்
பண்டிகைக் காலம்

By

Published : Jan 3, 2022, 4:41 PM IST

நெல்லை:Special buses for Pongal: ரெட்டியார் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

அவர் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நெல்லை மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்களைக் கண்டறிந்து 350 பள்ளிகளில், 58 ஆயிரத்து 578 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 2,500 பேர் வரை சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்

பொங்கலுக்கு 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசு பேருந்துகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தீபாவளி பண்டிகைக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்த 7 தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டுக்கு அதிக தொகை வசூலிப்பதைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசு பேருந்தில் பயணம் செய்யுங்கள்

முன்பு, தீபாவளி பண்டிகைக்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டதைப் போல, பொங்கல் பண்டிகைக்கும் தேவைக்கு அதிகமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் தனியார் பேருந்து பயணத்தைத் தவிர்த்து அரசு பேருந்துகளைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளில் அதிகமான பயணக் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பேருந்துகளில் மாணவர்கள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் முன்பு இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது என்று கூறினார்.

மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது; விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

இதையும் படிங்க: நீர்நிலையில் நியாயவிலைக் கடை... மின் இணைப்புத் தர மறுக்கும் வாரியம்: திமுக எம்பி நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details