தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்ஜெட் - காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற கட்டுமான தொழில் நுட்பத்திற்கு மாறவேண்டும் நிதியமைச்சர் தகவல் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஓராண்டுக்குள் திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை உள்ளிட்டவைகள் முழுமையாக மின்னணுமயமாக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By

Published : Aug 13, 2021, 11:52 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.13) வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றது. அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கட்டுமானத் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

அப்போது, “சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றத்திற்கும், ஏற்ற கட்டுமானத் தொழில்நுட்பத்திற்கு மாறுவது மிகவும் அவசியமாகும்.

கட்டுமானச் சவால்களை எதிர்கொள்வதற்காக கட்டட தகவல் மாதிரியாக்கம், புதுமையான விரைவு கட்டுமானத் தொழில்நுட்பம், தானியங்கு தொழில்நுட்பம், நீடித்து நிலை நிற்கும் கட்டுமான பொருள்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் இவையனைத்தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘தமிழ்நாடு வல்லரசு நாடாக மாறும் என்பதை நிதிநிலை அறிக்கை காட்டியுள்ளது’ - ஈஸ்வரன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details