சென்னை அருகே ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் வெளியேறி வருகிறது. அதனை தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் பொன்னையன், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் கொட்டும் மழையில் ஆவடியை சுற்றி ஆய்வு செய்தனர். அதில் பருத்திப்பட்டு ஏரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மழைநீர் கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "ஆவடியில், 250 சாலை பணிகள் விரைவில் நடைபெறும் என்றார். தொடர்ந்து, இன்னும் அதிக அளவில் மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு பிரச்சனை பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. அதனை 27 கோடி ரூபாய் செலவில் ஐந்து இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
கொட்டும் மழையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு! - நிவர் புயல் மழை
சென்னை: ஆவடியில் மழை நீர் கால்வாய் பகுதிகளை கொட்டும் மழையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.

minister_pandiyarajan
கொட்டும் மழையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு
இதையும் படிங்க:சென்னை காவல் துறையைப் பாராட்டிய முதலமைச்சர்
Last Updated : Nov 27, 2020, 11:00 PM IST