தனியார் அமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 285 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச கண்ணாடிகளை வழங்கினார்.
தமிழ், சமஸ்கிருதம் என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் - அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: தமிழ் vs சம்ஸ்கிருதம் என மக்களை குழப்ப ஸ்டாலின் முயற்சிப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 7ஆம் நூற்றாண்டு வரை தமிழில் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதன்பிறகுதான் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என மாறியுள்ளது. தமிழில்தான் குடமுழுக்கு நடத்தவேண்டும் என ஸ்டாலினை தவிர எந்த உண்மையான தமிழ் அமைப்புகளும் கேட்கவில்லை.
இந்து அடையாளம் வேண்டாம் என கூறும் ஸ்டாலின், இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், தற்போது ஆன்மீக காரியங்கள் குறித்து பேச என்ன உரிமை உள்ளது என சாடிய அமைச்சர், இது மத நம்பிக்கையுள்ளவர்கள் நடத்தும் ஆட்சி என குறிப்பிட்டார். மேலும் தமிழ், சமஸ்கிருதம் என குழப்பத்தை உருவாக்க முயல்வது வன்மம், குரோதம் வைத்து செய்வது போன்றுள்ளது என குற்றஞ்சாட்டினார்.