தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 19, 2019, 7:27 PM IST

ETV Bharat / city

கீழடியில் விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி - அமைச்சர் கே.பாண்டியராஜன்

சென்னை: கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Minister pandiyarajan

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர் சிற்ப சிலைகளின் கண்காட்சியை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதனைத் தொரடர்ந்து, அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை சார்பில் உருவாக்கப்பட்ட செயலியை தொடங்கிவைத்ததுடன் கீழடி அகழ்வாய்வு குறித்து விளக்கும் புத்தகத்தையும் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சென்னை மியூசியம் என்ற இணையதளம் மூலமாக அருங்காட்சியங்கள் குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் இசைக்கருவி அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இசை அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகளிடம் ஏற்கனவே பேசி உள்ளோம். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு தொடங்கப்படும். ஆறாம் கட்ட அகழ்வாய்வுக்காக மத்திய தொல்லியல் துறையின் உதவியை நாட உள்ளோம் அவர்களின் உதவி கிடைக்கும் பட்சத்தில் அகழ்வாராய்ச்சி பெரிய அளவில் நடக்க வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும் படிக்க: கீழடி அகழாய்வு: பண்டைய ஓடுகள், பானை கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details