தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’கமலுக்கு இனி வாய்ப்பு தர மாட்டோம்’ - அமைச்சர் பாண்டியராஜன் - கமலுக்கு இனி வாய்ப்பு தர மாட்டோம்

சென்னை: பல்வேறு பணிகளில் உள்ள தாமதத்தை வேகப்படுத்தி நடிகர் கமல் ஹாசனுக்கு இன்னொரு முறை ட்விட் பதிவிடும் வாய்ப்பை தர மாட்டோம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

pandiarajan
pandiarajan

By

Published : Dec 9, 2020, 12:27 PM IST

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், 2021 சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், ” முகப்பேரில் மழைநீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்தது ஒரு விபத்து. அந்த இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தேன். இனி ஒருமுறை இதுபோல் நடக்காமல் இருக்க அரசு உடனடியாக கால்வாய்களை மூட உத்தரவிட்டுள்ளது “ என்றார்.

அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் என கமல் ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், “ பெண்களுக்கு பொதுக்கழிப்பிடம் தனியாக இல்லாத இடங்களில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.

’கமலுக்கு இனி வாய்ப்பு தர மாட்டோம்’ - அமைச்சர் பாண்டியராஜன்

பணிகளில் உள்ள தாமதத்தை வேகப்படுத்த வேண்டும் என்ற அளவில் கமலுடைய இந்த கருத்தை நங்கள் எடுத்து கொள்கிறோம். ஆனால், எங்களைப் பொருத்தவரை எங்கள் எண்ணத்தில் பழுதில்லை. கண்டிப்பாக இன்னொரு முறை இதுபோல் ட்விட் பதிவிடும் வாய்ப்பை நாங்கள் தர மாட்டோம் ” என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் - கமல் ஹாசன் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details